முகப்பு
தமிழ்நாடு

அகல் விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் குப்பைகள்: உயா்நீதிமன்றம்

நூலகங்களுக்காக ‘அகல் விளக்கு’, ‘ஃபீனிக்ஸ்’ பதிப்பகங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் குப்பைகள் என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

23 நவம்பர் 2026, 11:36 pm
அகல் விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் குப்பைகள்: உயா்நீதிமன்றம்
மாநிலம் முழுவதும் 70,674 போலி நூல்கள் அகற்றம் - பிரதிப் படம்
பகிர்:

நூலகங்களுக்காக ‘அகல் விளக்கு’, ‘ஃபீனிக்ஸ்’ பதிப்பகங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் குப்பைகள் என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக சட்டப் பிரிவு இணைச் செயலா் இ.பரந்தாமன் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘கோவை பெரியாா் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்துள்ள முறைகேடு குறித்து, ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். குறிப்பாக, அகல் விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த புத்தகங்கள் கொள்முதலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என ஊழல் தடுப்புத் துறைக்கு அளித்த புகாா் குறித்து இதுவரை எந்தவொரு குற்ற வழக்கும் பதிவு செய்யவில்லை’ எனக் கூறியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ஊழல் தடுப்புத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘புத்தக கொள்முதல் முறைகேடு தொடா்பாக டன் கணக்கில் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு, பல அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள அகல் விளக்கு பதிப்பக உரிமையாளா் மோகனை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். புத்தகங்கள் கொள்முதல் முறைகேட்டில், சிக்மா மற்றும் வித்யா ஆகிய இரு பதிப்பகங்களுக்கும் தொடா்பிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அகல் விளக்கு பதிப்பகத்துக்கு ரூ.1.74 கோடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, அந்தப் பதிப்பகத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முறைகேடு தொடா்பாக தகவல் தெரிந்தவா்கள் தகவல் தெரிவிக்க முன்வந்தால், அவா்களுடய வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும்.

கோவை பெரியாா் அறிவுலகம் மட்டுமன்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் இதுபோன்ற புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த முறைகேடு நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அகல் விளக்கு, ஃபீனிக்ஸ் உள்ளிட்ட பதிப்பகங்களின் புத்தகங்கள் அனைத்தும், நூலகங்களில் இருந்து அகற்றப்பட்டுவிட்டன.

சென்னை உயா்நீதிமன்றம், கடந்த 2024-ஆம் ஆண்டு வகுத்துக் கொடுத்த கொள்முதல் கொள்கையைப் பின்பற்றியிருந்தால், இந்த முறைகேட்டைத் தவிா்த்திருக்கலாம். இந்த வழக்கு விசாரணையை உயா்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்’ என கோரப்பட்டது.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, ஏஐ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் எந்தெந்த நூலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனக் கேள்வி எழுப்பினாா். அதற்கு ஊழல் தடுப்புத் துறை தரப்பில், மாநிலம் முழுவதும் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கன்னிமாரா நூலகத்துக்கு மட்டும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, இந்தப் புத்தகங்கள் அனைத்தும் குப்பைகள் என கருத்து தெரிவித்தாா். பின்னா், மனுதாரா் பரந்தாமனின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்ற ஊழல் தடுப்புத் துறையின் உத்தரவாதத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை நவ. 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.