FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நூல் கொள்முதல் முறைகேடு: இந்தியாவின் முதல் ஏஐ ஊழல்– அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு!

பெரியார் அறிவுலக ஊழல் விவகாரத்தில் அமைச்சர் ராஜ்மோகன் சென்னையில் அளித்த விளக்கம் பற்றி.....

7 நவம்பர் 2026, 3:17 pm
அமைச்சா் ராஜ்மோகன் - கோப்புப் படம்
பகிர்:

இந்தியாவிலேயே முதல்முறையாக ஏஐ மூலம் மிகப்பெரிய ஊழலை திமுக செய்துள்ளது என்று அமைச்சர் ராஜ்மோகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பெரியார் அறிவுலக ஊழல் விவகாரத்தில் அமைச்சர் ராஜ்மோகன் சென்னையில் இன்று அளித்த விளக்கத்தில், போலி நூல்களைக் கொள்முதல் செய்ததில் ஒரு பெரிய சிண்டிகேட்டே செயல்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பிப்ரவரி 16-ஆம் தேதி புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, அதே ஆட்சியில் மார்ச் 14-ஆம் தேதியன்று இதற்கான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. எனவே, நூல் கொள்முதல் ஊழல் திமுக ஆட்சிக் காலத்தில்தான் நடைபெற்றுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறை இது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொள்ளும். ஒரே ஒரு நபர் இரண்டு மற்றும் மூன்று பதிப்பகங்களை நடத்தி இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். போலி நூல்களில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்களின் பெயர்களைக் கண்டறிந்து கூறுபவர்களுக்குத் தகுந்த சன்மானம் வழங்கப்படும். இந்தியாவிலேயே முதல்முறையாக ஏஐ மூலம் மிகப்பெரிய ஊழலை திமுக செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நூலகங்களை திமுக ஆட்சிக் காலத்தில் 'டிஜிட்டல் கரையான்' அரித்துள்ளது. நூல் கொள்முதல் ஊழல் குறித்து விசாரிக்கச் சிறப்புக் குழு அமைக்கப்படும்.

Advertisement

Advertisement

அனைத்து நூலகங்களிலும் இந்தச் சிறப்புக்குழு ஆய்வு நடத்தும். திருச்சி, கடலூர் ஆகிய மாவட்ட நூலகங்களுக்கும் சர்ச்சைக்குரிய புத்தகங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. உயர்நிலைக் குழுவின் ஒப்புதலோடுதான் இந்தப் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. நூலகக் கட்டடக் கட்டுமானப் பணிகளிலும் ஊழல் நடைபெற்றிருக்க அதிக வாய்ப்புள்ளது. வெளிப்படையாக ஊழல் செய்துவிட்டுத் தற்போது மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வேலையில் திமுக ஈடுபட்டு வருகிறது.

இந்த முறைகேடுகளுக்காகத் தமிழ்நாட்டு மாணவர்களிடம் திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் ‘பெரியார் அறிவுலகம்’ மற்றும் அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் போலி ஆசிரியர்களின் பெயர்கள், செயற்கை நுண்ணறிவைப்(ஏஐ) பயன்படுத்தி பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

summary

Minister Rajmohan has accused the DMK of committing India's first massive scam using AI.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.