முகப்பு

கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்- விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் அரசுத் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி...

6 வினாடிகள் முன்பு
கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்- விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம். - கோப்புப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி ஆட்சியர் தொடர்பாக அரசு விளக்கம் அளிக்கும்படி அரசுத் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக - எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தித் தாள்கள், செய்தி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளி வந்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகாரளிக்க வேண்டுமென காத்திருக்காமல் பொது வெளியில் உள்ள தகவல்களை வைத்து விசாரணை நடத்த வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு டிஜிபி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.க்கும் உத்தரவிட வேண்டும், டிஜிட்டல் ஆதாரங்களை சேகரித்துப் பத்திரப்படுத்த உத்தரவிட வேண்டும் என, மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த வழக்கு இன்று நீதிபதி வி.லட்சுமிநாராயாணன் முன் விசாரணைக்கு வந்தபோது, செய்திதாள்களில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு எப்படி உத்தரவிட முடியும்? ஆபாச குறுஞ்செய்தி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எதுவும் புகார் அளித்துள்ளாரா? ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதற்கான ஆதாரங்கள் உள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு காவல்துறை தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், தலைமைச் செயலர் உள்பட யாரிடமும் புகார் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. ஆளுங்கட்சி எம்எல்ஏவை அனைத்து உயரதிகாரிகளும் பாதுகாப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

தேசிய மகளிர் ஆணையமே செய்திதாள்களில் வந்த தகவலின் அடிப்படையில்தான் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் அளிக்காத நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கப்போவதில்லை எனத் தெரிவித்தார். ஒருவேளை குறுஞ்செய்தி அனுப்பியது உண்மையாக இருந்தால், அது துரதிர்ஷ்டவசமானது. இந்த விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கருத்துகளைக் கேட்டு விளக்கம் அளிக்கும்படி அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.

summary

The Madras High Court has ordered the government side to submit an explanation regarding the Kallakurichi District Collector issue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.