FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: உண்மை வெளிவரும் என நம்புகிறேன் - அண்ணாமலை

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் உண்மை வெளிவரும் என நம்புவதாக அண்ணாமலை தெரிவித்திருப்பது குறித்து...

8 வினாடிகள் முன்பு
அண்ணாமலை - யூடியூப்
பகிர்:

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் உண்மை வெளிவரும் என நம்புவதாக வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை திங்கள்கிழமை (நவ. 16) தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது:

Advertisement

Advertisement

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் என்ன நடைபெற்றது என்ற உண்மையை 7 நாள்களுக்குள் அனுப்ப வேண்டுமென தேசிய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆகவே, இதன்மூலமாவது உண்மை வெளிவரும் என நான் நம்புகிறேன். தற்போது டிஜிபிக்கு வேறு வழியில்லை; 7 நாள்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியரிடம் விசாரிக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடும்போது, பத்திரிகையாளர்களை மாவட்ட ஆட்சியர் சந்தித்துப் பேசுவதென்பது மரபு. கள்ளக்குறிச்சியைத் தவிர தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் பேசியிருக்கிறார்கள். அதேபோல், அரசு நிகழ்ச்சிகளையும் கள்ளக்குறிச்சி ஆர்சியர் தவிர்த்துக் கொண்டு வருகிறார். அவரின் கணவரும் மாவட்ட ஆட்சியராக உள்ளார். எனவே இந்த நிகழ்வானது நிறைய தர்ம சங்கடங்களை எற்படுத்தியுள்ளன.

இருப்பினும், முதல்வரிடம் நாம் கோரிக்கை வைத்த போதிலும் அவர் இதைப் பற்றி பேசவில்லை. டிஜிபி, தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர் சங்கம்கூட பேசவில்லை. இறுதியாக, தேசிய மகளிர் ஆணையத்தின் நோட்டீஸுக்காவது பதிலளீக்கிறார்களா? அல்லது அதையும் காலம் தாழ்த்தி பதிலளிக்காமல் தப்பிக்கிறார்களா? என்று பார்ப்போம்.

இந்த விவகாரத்தில் தமிழக மக்கள் விடையைத்தான் தேடுகிறார்கள். இந்த நிகழ்வு ஒவ்வொருநாளும் அதிகமான மர்மங்களை உருவாக்குகிறதே தவிர தீர்வை அளிக்கவில்லை என்று அண்ணாமலை தெரிவித்தார்.

summary

Annamalai, leader of the 'We the Leaders' organization, stated on Monday (Nov. 16) that he expects the truth to emerge regarding the Kallakurichi MLA issue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.