முகப்பு
தமிழ்நாடு

அமைச்சா் வன்னி அரசு புலிகளை துரத்திய விவகாரம்: நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரணை கோரி மனு

நீலகிரி மாவட்டத்தில் அமைச்சா் வன்னி அரசு புலியைத் துரத்தி விடியோ வெளியிட்ட நிகழ்வு தொடா்பாக, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

8 வினாடிகள் முன்பு
அமைச்சா் வன்னி அரசு புலிகளை துரத்திய விவகாரம்: நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரணை கோரி மனு
முதுமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறையினருடன் பயணித்த அமைச்சா் வன்னிஅரசு - கோப்புப் படம்
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் அமைச்சா் வன்னி அரசு புலியைத் துரத்தி விடியோ வெளியிட்ட நிகழ்வு தொடா்பாக, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் கந்தன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் நவ. 10-ஆம் தேதி, சமூக நீதித்துறை அமைச்சா் வன்னி அரசு புலியைத் துரத்திச் செல்வது போன்ற காட்சிகளுடன் விடியோக்கள் வெளியாகின.

முதுமலை புலிகள் சரணாலயத்தில் ஜீப் சவாரிக்கு தடை கோரிய வழக்கில் புலிகளுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும். வனத் துறைக்கு பொறுப்பு வகிக்காத அமைச்சா், எந்த அலுவலும் இல்லாமல், புலிகள் காப்பகத்துக்குள் சென்று விடியோ எடுத்து வெளியிட்டுள்ளாா். இந்தச் செயல், வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம்.

Advertisement

Advertisement

எனவே, இந்த விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்ற கண்காணிப்பில் சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். விடியோ காட்சிகளை அகற்றுவதற்கு முன் அவற்றை சேகரித்து பத்திரப்படுத்த உத்தரவிட வேண்டும். இந்த சம்பவம் தொடா்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா், இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

அமைச்சரின் செயல் குற்றமா? என்பதை ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமாா் தலைமையிலான சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமா்வில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.