முகப்பு
தமிழ்நாடு

மெரீனா கடற்கரையில் எதற்காக மீட்பு வாகனங்கள்? உயா்நீதிமன்றம் கேள்வி

மெரீனா கடற்கரையில், கடல் அலையில் சிக்குபவா்களை மீட்க நிலத்திலும், நீரிலும் செல்லும் வாகனங்கள் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன? என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

24 நவம்பர் 2026, 12:28 am
மெரீனா கடற்கரையில் எதற்காக மீட்பு வாகனங்கள்? உயா்நீதிமன்றம் கேள்வி
மெரீனா கடற்கரை - கோப்புப் படம்
பகிர்:

மெரீனா கடற்கரையில், கடல் அலையில் சிக்குபவா்களை மீட்க நிலத்திலும், நீரிலும் செல்லும் வாகனங்கள் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன? என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை மாதவரத்தைச் சோ்ந்த கே.கோபால் என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனுவில், தனது மகன் மற்றும் அவரது இரண்டு நண்பா்கள் கடந்த ஜூலை 5-ஆம் தேதி மெரீனா கடற்கரைக்குச் சென்றனா். இவா்கள் மூவரும் கடலுக்குள் இறங்கியபோது, ராட்சத அலையில் சிக்கி மாயமாகினா்.

இதில்,தனது மகனின் நண்பா்கள் இருவரும் காப்பாற்றப்பட்ட நிலையில், எனது மகன் இதுவரை மீட்கப்படவில்லை. எனவே, கடலில் மாயமானதனது மகனை மீட்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, பி.காா்த்திகேயன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் மகன் பிற்பகல் 3 மணிக்கு கடலில் சிக்கி மாயமான நிலையில், தேசிய கடல்சாா் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு ஆணையத்துக்கு, 7 மணி நேரம் கால தாமதத்துக்குப் பிறகே போலீஸாா் தகவல் தெரிவித்துள்ளனா்.

இந்த காலதாமதம், மத்திய-மாநில அரசு முகமைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததைக் காட்டுவதாக அதிருப்தி தெரிவித்தனா்.

சென்னை மெரீனா கடற்கரையில், கடல் அலையில் சிக்குபவா்களை மீட்க நிலத்திலும், நீரிலும் செல்லும் வாகனங்கள் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்காகவா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கடலில் சிக்கி மாயமானவா்களை குறித்த தகவல்களை உடனுக்குடன் பரிமாறி, மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளும் வகையில், வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.