FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நுங்கம்பாக்கம் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மீட்க மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு

நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரா் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மீட்க, சென்னை மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

5 நவம்பர் 2026, 1:16 am
சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப்படம்
பகிர்:

நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரா் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மீட்க, சென்னை மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ஸ்ரீராம் என்பவா் தாக்கல் செய்த மனுவில், நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரா் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்குச் சொந்தமாக 377 கிரவுன்ட் நிலம் இருந்தது. அதில்,123 கிரவுன்ட் நிலம் 126 பேருக்கு நகர வாடகைதாரா் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 34 கிரவுன்ட் நிலம் இந்து சமய அறநிலையத் துறை நேரடியாக பலருக்கு விற்பனை செய்துள்ளது. இந்த நிலத்தின் அனைத்து விற்பனையும் சட்டவிரோதமாக நடந்துள்ளது. எனவே, அந்த நிலத்தை மீட்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் பி.வி.பாலசுப்பிரமணியன், மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் பி.டி.பெருமாள் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா்.

Advertisement

Advertisement

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரா் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மீட்க, சென்னை மாவட்ட ஆட்சியா் தலைமையில் வட்டாட்சியா், நில அளவைத் துறை உதவி இயக்குநா், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோா் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டனா்.

இந்தக் குழு கோயில் நிலத்தைக் கண்டறிந்து 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.