FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தஞ்சை திருப்பதியில் தீப ஒளியில் ஜொலித்த ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள்!

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் புரட்டாசியை முன்னிட்டு தீப ஒளியில் பெருமாள் அலங்காரம்...

17 அக்டோபர் 2026, 12:47 pm IST
ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள்
பகிர்:

பிரசித்தி பெற்ற ஸ்ரீ தேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் புரட்டாசியை முன்னிட்டு தீப ஒளியில் பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டது. கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் அரண்மனை தேவதானத்திற்கு உள்பட்ட தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் பகுதியில் தஞ்சை திருப்பதி என்று அழைக்கப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது.

இக்கோயிலில் புரட்டாசி மாதக் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு மூலவர் சுவாமிக்குத் திருப்பதியில் ஒரு நாள் அலங்காரம் போல தீப ஒளியில் பெருமாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆரத்தி காட்டப்பட்டது.

Advertisement

Advertisement

இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு மனமுருக வேண்டிக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments