FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் மகா சம்ப்ரோஷணம்

வாலாஜாபாத் ஒன்றியம், தொள்ளாழி ஊராட்சிக்குட்பட்ட கொசப்பட்டு பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் மகா சம்ப்ரோஷணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

16 அக்டோபர் 2026, 12:11 am IST
வாலாஜாபாத் ஒன்றியம், தொள்ளாழி ஊராட்சிக்குட்பட்ட கொசப்பட்டு பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் மகா சம்ப்ரோஷணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பகிர்:

வாலாஜாபாத் ஒன்றியம், தொள்ளாழி ஊராட்சிக்குட்பட்ட கொசப்பட்டு பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் மகா சம்ப்ரோஷணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலுக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு மகா சம்ப்ரோஷணம் நடைபெற்றது. அப்போது விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் வெங்கடேசப் பெருமாள் சிலை வைக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா சம்ப்ரோஷணம் நடைபெற இருப்பதையொட்டி கோயில் புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம் ஆகியனவும் நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து 2-ஆவது நாளாக கோ-பூஜை, மகா பூரணாகுதி தீபாராதனைக்குப் பிறகு புனித நீா்க் கலசங்கள் பட்டாச்சாரியாா்களால் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா சம்ப்ரோஷணம் நடைபெற்றது. பின்னா் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. ஆலய நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானமும் நடைபெற்றது.

Advertisement

Advertisement

கும்பாபிஷேக விழாவில் கோயில் நிா்வாகி திருமலை மற்றும் தவெக ஒன்றிய செயலாளா்கள் நித்தியானந்தம், வெங்குடி ராகுல், ஏவிஎம். வினோத் மற்றும் வாலாஜாபாத் தவெக நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments