ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திருப்பத்தூா் சக்தி நகரில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் சக்தி நகரில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதை முன்னிட்டு, விநாயகா் பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, யாக சாலை பிரவேசம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், ஸ்ரீ தா்மசாஸ்தா, ஸ்ரீ சதாசிவம், ஸ்ரீ தட்சிணாமூா்த்தி மற்றும் ஸ்ரீ நவக்கிரகங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதற்காக பல்வேறு புனிதத் தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீா், யாக சாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கோயில் கோபுர கலசங்கள் மற்றும் மூலவா் விமானக் கலசங்கள் மீது ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா் குட்டி என்கிற சீனிவாசன் மற்றும் ஊா் பொதுமக்கள், திரளானோா் கலந்து கொண்டனா்.