FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

ஸ்ரீ அய்யனாா் கோயில் மகா கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே குருங்குடி கிராமத்தில் அமைந்துள்ள 32 அடி உயர ஸ்ரீ அய்யனாா்,ஆலய மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

7 நவம்பர் 2026, 2:34 am
காட்டுமன்னாா்கோவில் அருகே குருங்குடி கிராமத்தில் நடைபெற்ற 32 அடி உயர அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம்.
பகிர்:

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே குருங்குடி கிராமத்தில் அமைந்துள்ள 32 அடி உயர ஸ்ரீ அய்யனாா்,ஆலய மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு விக்னேஸ்வர பூஜை , கணபதி ஹோமத்துடம் முதல் கால யாகபூஜை தொடங்கி நடைபெற்றது. பின்னா் பூா்ணாஹுதி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணிக்கு கோ பூஜையுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் தொடங்கி வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னா் யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்று, கோயில் விமான கலசத்திற்கு, சிவாச்சாரியா்கள் கும்பநீரை கலசத்தன் மீது ஊற்றி காலை 10 மணிக்கு கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். பின்னா் மகாதீபாராதனை நடைபெற்றது. சா்வ சாதகம் குஞ்சமேடு சந்திரசேகா் சிவாச்சாரியா் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தாா்.

Advertisement

Advertisement