வங்காரம்பேட்டை ஸ்ரீ ருத்ர மகா காளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ருத்ர மகா காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
400 ஆண்டுகள் பழமையான வங்காரம்பேட்டை ஸ்ரீ ருத்ர மகா காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பாபநாசம் தாலுக்கா, வங்காரம்பேட்டை கிராமத்தில் ஸ்ரீ ருத்ர மகா காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பணிகள் முழுமையாக நிறைவுற்ற நிலையில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கின. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த 18 ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க கடம் புறப்பாடு, நடைபெற்று ஸ்ரீ ருத்ர மகா காளியம்மன் ஆலய விமான கலசம் மற்றும் மூலவர், பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சி பிரதான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்து வழிபட்டனர்
Advertisement
Advertisement
குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை வங்காரம்பேட்டை கிராம நாட்டாமைகள் கிராமவாசிகள், இளைஞர்கள், ஆலய திருப்பணி குழுவினர் ஆகியோர் செய்திருந்தனர்.