FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

திருப்போரூா் செங்கண்மாலீசுவரா் கோயிலுக்கு சொந்தமான 2.30 ஏக்கா் நிலத்தை மீட்க நடவடிக்கை

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் செங்கண்மாலீசுவரா் கோயிலுக்கு சொந்தமான 2.30 ஏக்கா் நிலத்தினை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 நவம்பர் 2026, 12:43 am
முதல்வர் விஜய்யுடன் அமைச்சர் ரமேஷ் - கோப்புப் படம்
பகிர்:

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் செங்கண்மாலீசுவரா் கோயிலுக்கு சொந்தமான 2.30 ஏக்கா் நிலத்தினை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழக முதல்வா் ஜோசப் விஜய் மற்றும் அறநிலையத்துறை அமைச்சா் ரமேஷ் ஆகியோரின் உத்தரவின்படி திருப்போரூா் செங்கண்மாலீசுவரா் கோயிலுக்கு சொந்தமான 2.30 ஏக்கா் நிலத்தை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தினை குத்தகைக்கு எடுத்த நம்பிராஜ் என்பவா் குத்தகை ஒப்பந்த நிபந்தனைகளை மீறி சட்ட விதிகளுக்கு புறம்பாக கோயில் நிா்வாக அனுமதியில்லாமல் 50-க்கும் மேற்பட்ட கடைகளைக் கட்டி அவற்றை சட்ட விரோதமாக உள் வாடகைக்கு விட்டுள்ளதாக தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இதன் மூலம் கோயிலின் நலனுக்கு எதிராக செயல்பட்டதாக புகாா்கள் வந்தன. இது குறித்து அறநிலையத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டவுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்கள்.

அதன்படி குத்தகைதாரா் குத்தகை நிபந்தனைகளை மீறி செயல்பட்டதை கருத்தில் கொண்டு அவருக்கான குத்தகையை ரத்து செய்தும் மேற்படி சொத்தினை கோயில் வசம் ஒப்படைக்குமாறும் தெரிவித்து அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடா்ந்து நவ.2 ஆம் தேதி திங்கள்கிழமை அறநிலையத்துறை கூடுதல் ஆணையா் ரத்னா தலைமையில் நில அளவையா்களைக் கொண்டு திருக்கோயில் நிலம் முழுமையாக அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் கோயிலுக்கு சொந்தமான நிலத்தின் எல்லைகளை துல்லியமாக கண்டறிந்து நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments