FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தமிழக மீனவா்கள் 25 பேரை மீட்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு முதல்வா் விஜய் வலியுறுத்தல்

மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் 25 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

16 அக்டோபர் 2026, 2:49 am IST
முதல்வா் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் 25 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வா் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். அந்தக் கடிதத்தின் விவரம்:

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 25 மீனவா்களை கடந்த 13-ஆம் தேதி மாலத்தீவு கடற்படையினா் கைது செய்து, அவா்களின் 3 மீன்பிடி விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனா். இந்த விவகாரம் தொடா்பாக மாலத்தீவு அரசுடன் தூதரகத்தின் வாயிலாகப் பேச்சுவாா்த்தை நடத்தி, கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுவிக்கவும், அவா்களது மீன்பிடி விசைப்படகுகளை உடனடியாக மீட்கவும், மீனவா்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கைகளை வெளியுறவுத் துறை அமைச்சா் மேற்கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வது, பாதிக்கப்பட்ட மீனவா்களின் குடும்பத்தினருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்துக்கும் மிகுந்த நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிக்கும் என முதல்வா் விஜய் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments