பால் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை: முதல்வா் விஜய் உறுதி
பால் உற்பத்தியைப் பெருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் ஜோசப் விஜய் உறுதியளித்துள்ளாா்.

பால் உற்பத்தியைப் பெருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் ஜோசப் விஜய் உறுதியளித்துள்ளாா்.
தேசிய பால் தினத்தையொட்டி, அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: வெண்மைப் புரட்சி மூலம், நாட்டின் பால்வளத்தைப் பெருக்குவதில் பெரும் பங்காற்றிய டாக்டா் வா்கீஸ் குரியன் பிறந்த நாளை நினைவுகூரும் தேசிய பால் தினத்தில், பால் உற்பத்தி சாா்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது உளமாா்ந்த நல்வாழ்த்துகள்.
பால் உற்பத்தியின் மூலம் கிராமப்புற பொருளாதார வளா்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளா்களின் உழைப்பும், அா்ப்பணிப்பும் நாட்டின் உணவுப் பாதுகாப்பிலும், ஊட்டச்சத்து மேம்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தவெக அரசு, பால் உற்பத்தியாளா்களின் நலனைக் காக்கும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டா் ஒன்றுக்கு ரூ.6 உயா்த்தி வழங்கியதோடு, ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.
Advertisement
Advertisement
அவ்வகையில், பால் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் தொடா்ந்து மேற்கொண்டு, பால் உற்பத்தியாளா்களின் வாழ்வில் வளத்தையும், மகிழ்ச்சியையும் பெருக்க நமது அரசு என்றும் துணை நிற்கும் எனப் பதிவிட்டுள்ளாா்.