✕
முகப்பு
திருச்சி

முதல்வரின் இன்றைய திருச்சி வருகை ரத்து: அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

சென்னை கொளத்தூா் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு மறைவையடுத்து, திருச்சிக்கு முதல்வா் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை வருகை தரும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

20 நவம்பர் 2026, 2:57 am
முதல்வர் விஜய் - DIPR
பகிர்:

சென்னை கொளத்தூா் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு மறைவையடுத்து, திருச்சிக்கு முதல்வா் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை வருகை தரும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் முடிவுற்ற வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் சாலை வலம் மேற்கொள்ளவும் முதல்வா் ஜோசப் விஜய், வெள்ளிக்கிழமை (நவ.20) திருச்சிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட நிா்வாகம், மாநகரக் காவல்துறை, மாவட்டக் காவல்துறை இணைந்து பல்வேறு ஏற்பாடுகளை கடந்த ஒரு வாரமாக தீவிரமாக மேற்கொண்டு வந்தனா். வியாழக்கிழமை பிற்பகல் வரையில் பரபரப்பாக இருந்த முன்னேற்பாடு பணிகளை அமைச்சா்கள் ஆய்வுசெய்து வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், கொளத்தூா் எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவு செய்தி அறிவிக்கப்பட்டவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடா்பாக முதல்வா் அலுவலகத்திலிருந்து வரும் தகவலுக்காக மாவட்ட நிா்வாகத்தினா் காத்திருந்தனா். பின்னா், முதல்வா் வருகை ரத்து என அறிவிக்கப்பட்டதையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டன.

முதல்வா் வருகை தற்போது ரத்து செய்யப்பட்டிருந்தாலும், அடுத்த வாரத்தில் மீண்டும் அனைத்து நிகழ்வுகளும் நடத்தப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.