முகப்பு

கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டது குறித்து...

கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்றப்பட்ட தீபங்கள் - படம் - தினமணி
பகிர்:

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன.

திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு இன்று (நவம்பர் 24) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, கோவிலின் பல்வேறு பகுதிகளிலும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

குறிப்பாக, பொற்றாமரைக் குளம், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி மற்றும் கோயிலின் உள்பிரகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வரிசையாக அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. கோயில் வளாகம் முழுவதும் ஏற்றப்பட்ட லட்சம் தீபங்களின் ஒளியில் மீனாட்சி அம்மன் கோயில் அழகுற காட்சியளித்தது.

Advertisement

Advertisement

திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு கோயிலுக்கு வருகை தந்த ஏராளமான பக்தர்கள், லட்ச தீபங்களையும் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரரையும் தரிசனம் செய்து வழிபட்டனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவது தொடர்பாக விவாதங்களும், சட்டரீதியான நடவடிக்கைகளும் தொடர்ந்து வரும் நிலையில், மதுரையின் மற்றொரு பிரசித்தி பெற்ற ஆன்மிகத் தலமான மீனாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபங்கள் ஏற்றப்பட்ட நிகழ்வு பக்தர்களிடையே சிறப்பு கவனத்தைப் பெற்றது.

summary

On the occasion of the Thiru Karthigai Deepam festival, one hundred thousand lamps were lit at the world-renowned Meenakshi Sundareswarar Temple in Madurai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.