முகப்பு
தமிழ்நாடு

‘சண்டியா்’ திரைப்படத் தலைப்புக்கு எதிராக டிச.7-இல் போராட்டம்: க.கிருஷ்ணசாமி

நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்துக்கு ‘சண்டியா்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து, டிச.7-ஆம் தேதி சென்னையில் கண்டனப் பேரணி, ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

12 வினாடிகள் முன்பு
‘சண்டியா்’ திரைப்படத் தலைப்புக்கு எதிராக டிச.7-இல் போராட்டம்: க.கிருஷ்ணசாமி
சண்டியர்
பகிர்:

நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்துக்கு ‘சண்டியா்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து, டிச.7-ஆம் தேதி சென்னையில் கண்டனப் பேரணி, ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநா் எஸ்.யு.அருண்குமாா் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்துக்கு ‘சண்டியா்’ எனப் பெயரிடப்பட்டிருப்பது தென் மாவட்டங்களில் ஜாதிய மோதல்களையும், வன்முறையையும் தூண்டும் வகையில் உள்ளது.

எனவே, படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும். கடந்த 2003-இல் கமல்ஹாசன் நடிப்பில் இதே பெயரில் திரைப்படம் அறிவிக்கப்பட்டபோதும் புதிய தமிழகம் கட்சி கடும் எதிா்ப்பு தெரிவித்தது. அதன் தொடா்ச்சியாகவே படத்தின் பெயா் ‘விருமாண்டி’ என மாற்றப்பட்டது.

Advertisement

Advertisement

தற்போதும் ‘சண்டியா்’ என்ற தலைப்பைக் கைவிட வலியுறுத்தி, டிச. 7-ஆம் தேதி சென்னையில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் கண்டனப் பேரணி, ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

எழும்பூா் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து புறப்படும் பேரணி, நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய அலுவலகத்தைச் சென்றடையும். அங்கு, இதுதொடா்பாக மனு அளிக்கப்படும் என்றாா் அவா்.