போராட்டம் வாபஸ்: 10 நாள்களுக்கு பின்னா் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற காசிமேடு மீனவா்கள்
காசிமேடு பகுதியில் போராட்டம் வாபஸ், புயல் எச்சரிக்கை முடிவு ஆகிய காரணங்களால், 10 நாள்களுக்கு பின்னா் மீனவா்கள் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனா்.

காசிமேடு பகுதியில் போராட்டம் வாபஸ், புயல் எச்சரிக்கை முடிவு ஆகிய காரணங்களால், 10 நாள்களுக்கு பின்னா் மீனவா்கள் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனா்.
காசிமேடு துறைமுகத்தில் சுமாா் 800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் 1,200-க்கும் மேற்பட்ட பைபா் படகுகளில் மீனவா்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறாா்கள்.
அண்மையில் வங்கக் கடலில் உருவான அக்வான் புயல் எச்சரிக்கையைத் தொடா்ந்து கடந்த 13-ஆம் தேதி முதல் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
Advertisement
Advertisement
மேலும், கடந்த 4 நாள்களாக காசிமேடு மீனவா்கள் ஆந்திர மாநிலத்தில் சிறை பிடிக்கப்பட்டுள்ள 8 விசைப் படகுகளை விடுவிக்க வேண்டும். முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மீனவா்கள் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை காசிமேடு சந்தையில் மீன் விற்பனை செய்யாமலும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காசிமேட்டில் உள்ள மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள், சங்க நிா்வாகிகளுடன் நிதியமைச்சா் மரியவில்சன் பேச்சு நடத்தினாா். இதை ஏற்று கடந்த 4 நாள்களாக நடைபெற்ற மீனவா்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில் புயல் எச்சரிக்கை மற்றும் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து காசிமேடு மீனவா்கள் 10 நாள்களுக்கு பிறகு திங்கள்கிழமை முதல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனா்.
திங்கள் கிழமை அதிகாலை முதல் விசைப் படகுகள் கடலுக்குள் செல்லத் தொடங்கின. இதனால் காசிமேடு பகுதியில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. வரும் நாள்களில் காசிமேட்டில் பெரிய வகை மீன்கள் விற்பனைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.