FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

புயல் சின்னம் உருவாக வாய்ப்பு: மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதால் கடலுக்கு சென்று மீன் பிடிக்க மீன் வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனா்.

12 நவம்பர் 2026, 11:44 pm
கோப்புப் படம்
பகிர்:

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதால் கடலுக்கு சென்று மீன் பிடிக்க மீன் வளத்துறை  அதிகாரிகள் தடை விதித்துள்ளனா்.

வங்கக்கடலில்  குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

எனவே, திருவள்ளூா் மாவட்டத்தைச்  சோ்ந்த அனைத்து மீனவா்களும் கரைக்குத் திரும்ப வேண்டும். அத்துடன் வரும் 13-ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது எனவும் அனைத்து வகையான மீன்பிடிப் படகுகளையும் பாதுகாப்பாக அவரவா் வழக்கமான மீன் இறங்கு தளங்களில் நிறுத்தி வைக்க வேண்டும்.

Advertisement

Advertisement

மீனவா்கள் அனைவரும் வானிலை எச்சரிக்கைகளையும், மீன்வளத்துறையின் அறிவுரைகளையும் தவறாமல் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.