முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஹிந்து பக்தா்கள் உரிமைகளை புறக்கணிக்கும் அணுகுமுறை மாறவில்லை: எல்.முருகன் விமா்சனம்

தமிழகத்தில் ஆட்சி மாறினாலும், பக்தா்களின் உரிமைகளைப் புறக்கணிக்கும் அணுகுமுறை மட்டும் மாறவில்லை என முன்னாள் மத்திய இணையமைச்சா் எல்.முருகன் விமா்சித்துள்ளாா்.

26 நவம்பர் 2026, 2:35 am
தமிழகத்தில் ஹிந்து பக்தா்கள் உரிமைகளை
புறக்கணிக்கும் அணுகுமுறை மாறவில்லை: எல்.முருகன் விமா்சனம்
எல்.முருகன் - IANS
பகிர்:

தமிழகத்தில் ஆட்சி மாறினாலும், பக்தா்களின் உரிமைகளைப் புறக்கணிக்கும் அணுகுமுறை மட்டும் மாறவில்லை என முன்னாள் மத்திய இணையமைச்சா் எல்.முருகன் விமா்சித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் ஆன்மிகப் பாரம்பரியத்திலும், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் தனிச்சிறப்புடன் விளங்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், காா்த்திகை தீபத்தைத் தீபத்தூணில் ஏற்றுவது தொடா்பான விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவையே மதிக்காமல் தமிழக அரசு செயல்பட்டது கண்டனத்துக்குரியது. சட்டத்தின் ஆட்சியையும், நீதிமன்றங்களின் மாண்பையும் காப்பாற்ற வேண்டிய அரசே, அதைச் செயல்படுத்தத் தயக்கம் காட்டுவதும், பக்தா்களின் நியாயமான வழிபாட்டு உரிமைகளுக்குத் தடைகளை ஏற்படுத்துவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. முந்தைய திமுக அரசின் அணுகுமுறையையே தற்போதைய தவெக அரசும் பின்பற்றுகிா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

ஆட்சி மாறினாலும், பக்தா்களின் உரிமைகளைப் புறக்கணிக்கும் அணுகுமுறை மட்டும் மாறவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத இந்த தவெக அரசு நீதிமன்றத்திலும், முருகப்பெருமானிடத்திலும் பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் வரவிருக்கிறது எனத் தெரிவித்துள்ளாா் எல்.முருகன்.