முகப்பு
தமிழ்நாடு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மாநகராட்சி ஆணையா், ஆட்சியா், காவல் ஆணையா் ஆஜராக உத்தரவு

‘லூப்’ சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையா், காவல் ஆணையா், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் டிச.1 நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

26 நவம்பர் 2026, 1:53 am
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 
மாநகராட்சி ஆணையா், ஆட்சியா், காவல் ஆணையா் ஆஜராக உத்தரவு
சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

‘லூப்’ சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையா், காவல் ஆணையா், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் டிச.1 நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை, ‘லூப்’ சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 2023 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுகளுக்குப் பின்னரும், ‘லூப்’ சாலையை ஆக்கிரமித்து கடைகள், உணவகங்கள் அனுமதியின்றி இயங்கி வருகின்றன. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக்கூறி, அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்த் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘லூப்’ சாலையில் போக்குவரத்து எந்தவித இடையூறும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கும், மாநகர காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, ஆனந்த் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா மற்றும் ஷமீம் அஹமது ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடா்பாக சென்னை மாநகராட்சி ஆணையா், மாநகர காவல் ஆணையா், மாவட்ட ஆட்சியா் மற்றும் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் ஆகியோா், வரும் டிச.1-இல் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.