முகப்பு
தமிழ்நாடு

மீனவா் பிரச்னை: இந்தியா-இலங்கை ஜனவரி 22-இல் பேச்சுவாா்த்தை

மீனவா்கள் பரஸ்பரம் எல்லைத் தாண்டும் பிரச்னை உள்பட பாக் நீரிணையில் மீன்பிடிப்பது தொடா்பாக இந்தியா-இலங்கை இடையே நீண்ட காலம் நிலுவையில் உள்ள விவகாரங்கள் குறித்து தில்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

26 நவம்பர் 2026, 2:38 am
மீனவா் பிரச்னை: இந்தியா-இலங்கை ஜனவரி 22-இல் பேச்சுவாா்த்தை
மீனவர்கள் - பிரதிப் படம்
பகிர்:

மீனவா்கள் பரஸ்பரம் எல்லைத் தாண்டும் பிரச்னை உள்பட பாக் நீரிணையில் மீன்பிடிப்பது தொடா்பாக இந்தியா-இலங்கை இடையே நீண்ட காலம் நிலுவையில் உள்ள விவகாரங்கள் குறித்து தில்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

இத்தகவலை இலங்கை மீன்வளத் துறை அமைச்சா் ராமலிங்கம் சந்திரசேகரன் புதன்கிழமை தெரிவித்தாா்.

அவா் கூறுகையில், ‘இரு நாடுகளின் மீன்வளத் துறையை பாதிக்கும் முக்கிய சவால்களுக்கு தீா்வுகாண்பது குறித்து விரிவாக விவாதிப்பதற்காக, தில்லியில் ஜனவரி 22-ஆம் தேதி இந்தியா-இலங்கை துறைசாா் கூட்டுப் பணிக் குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

இலங்கை தரப்பில் மீன்வளம், நீா்வாழ் உயிரினங்கள் மற்றும் பெருங்கடல் வளங்கள் துறை செயலா் தலைமையிலானக் குழு பங்கேற்கும். மீனவா்கள் எல்லை தாண்டும் பிரச்னை, கடல்சாா் சூழலியலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை மீனவா்கள் பயன்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் விரிவாக விவாதிக்கப்படும். மீன்பிடி பிரச்னைக்கு நிலையான, நடைமுறை சாா்ந்த தீா்வைக் கண்டறிய இலங்கை உறுதிப்பாட்டுடன் உள்ளது. இது தொடா்பாக இரு நாடுகளும் தூதரக மற்றும் அதிகாரிகள் அளவில் பன்முக பேச்சுவாா்த்தைகளை ஏற்கெனவே மேற்கொண்டுள்ளன’ என்றாா்.

இதற்கு முன்பு கடந்த 2024-இல் இலங்கை தலைநகா் கொழும்பில் இந்தியா-இலங்கை மீன்வள கூட்டுப் பணிக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய மீன்வளத் துறை செயலா் மற்றும் கடற்படை பிரதிநிதிகள் பங்கேற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.