முகப்பு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவராக பியூஷ் சிங் நியமனம்!

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக பியூஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளது பற்றி...

23 வினாடிகள் முன்பு
காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவராக பியூஷ் சிங் நியமனம்!
காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவராக பியூஷ் சிங் பொறுப்பேற்பு - X
பகிர்:

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக பியூஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, கர்நாடகம் காவிரி நீரை தமிழகத்துக்கு திறக்க ஆணையம் உத்தரவிட்டு வருகிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக இருந்த எஸ்.கே. ஹல்தார் ஓய்வு பெற்றதையடுத்து, ஐஏஎஸ் அதிகாரி பியூஷ் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இன்று நடந்த 62 -வது ஆணையக் கூட்டத்தில் புதிய தலைவராக இருந்த பியூஷ் சிங்கிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் நீர்வளத் துறை செயலாளர் பிரசாந்த் வதனாரே உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

பியூஷ் சிங் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 2000 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் தற்போது மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நீர் இயக்கத்தின் இயக்குநராக இருக்கிறார். இவருக்கு தற்போது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

summary

Piyush Singh appointed as Chairman of the Cauvery Water Management Authority

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.