தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்து விடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது குறித்து...
தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் 15 நாள்களுக்கு காவிரி நீரைத் திறந்து விடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் இன்று (அக். 8) காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விடுவதில்லை என தமிழ்நாடு அரசு சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் 15 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால், தமிழக அரசின் கோரிக்கைக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மறுப்பு தெரிவித்தது.
Advertisement
Advertisement
இருப்பினும், தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் 15 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிட ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்தது.
இந்த நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் 15 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை கண்டிப்பாக திறக்க முடியாது என கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும்நிலையில், 15 நாள்களுக்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Cauvery Water Management Authority orders release of Cauvery water to Tamil Nadu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.