முகப்பு

‘இந்திய அரசியலமைப்பு நாள்: அரும்பங்காற்றிய தலைவர்களை நினைவுகூர்வோம்’ - முதல்வர் விஜய் வாழ்த்து!

வளம்மிக்க தமிழ்நாட்டையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்க உறுதியேற்போம் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளதைப் பற்றி...

‘இந்திய அரசியலமைப்பு நாள்: அரும்பங்காற்றிய தலைவர்களை நினைவுகூர்வோம்’ - முதல்வர் விஜய் வாழ்த்து!
முதல்வர் விஜய்
பகிர்:

வளம்மிக்க தமிழ்நாட்டையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்க உறுதியேற்போம் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், “இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1949 ஆம் ஆண்டு நவ. 26-ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் இந்திய அரசியலமைப்பு நாளான இந்நாளில், இச்சட்டத்தை உருவாக்கியதில் அரும்பங்காற்றிய தலைவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.

அரசியலமைப்பின் விழுமியங்களை நிலைநிறுத்தி, வளம்மிக்க தமிழ்நாட்டையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்! ஜனநாயகமும், சகோதரத்துவமும், சமூக நீதியும் தழைத்தோங்கட்டும்!” எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

summary

Chief Minister Vijay has stated that we must pledge to build a prosperous Tamil Nadu and a dynamic India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.