முகப்பு

சிறைச்சாலை பாதுகாப்பு: முன்னாள் டிஜிபியுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

சென்னை தலைமைச் செயலகத்தில் முன்னாள் டிஜிபி ஜே.கே. திரிபாதியுடன் முதல்வர் விஜய் ஆலோசனை....

52 வினாடிகள் முன்பு
சிறைச்சாலை பாதுகாப்பு: முன்னாள் டிஜிபியுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!
முன்னாள் டிஜிபி ஜே.கே. திரிபாதியுடன் முதல்வர் விஜய் - DIPR
பகிர்:

தமிழகத்தில் சிறைச்சாலைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் பொருட்டு முன்னாள் டிஜிபி ஜே.கே. திரிபாதியுடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று (23.11.2026) தலைமைச் செயலகத்தில், சிறைச் சாலைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவின் தலைவர் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே. திரிபாதி, (ஓய்வு) மற்றும் குழுவின் உறுப்பினர்கள் - சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநர் கே. சங்கர், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை முன்னாள் துணைத் தலைவர் (ஓய்வு) எஸ். ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

முன்னதாக சென்னை, மதுரை சிறைச் சாலைகளில் இருந்து கைதிகள் தப்பியோடிய விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

summary

CM vijay met with EX DGP JK Tripathi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.