முகப்பு

பெண்கள் பாதுகாப்பு! வாயே திறக்காத முதல்வர் விஜய்: மேயர் பிரியா

தவெகவினர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவிருப்பதாக சென்னை மேயர் பிரியா கூறியது குறித்து...

42 வினாடிகள் முன்பு
பெண்கள் பாதுகாப்பு! வாயே திறக்காத முதல்வர் விஜய்: மேயர் பிரியா
முதல்வர் விஜய் | மேயர் பிரியா - கோப்புப் படம்
பகிர்:

செயற்கை நுண்ணறிவு மூலம் தன்னைத் தவறாகச் சித்திரித்து இணையத்தில் பரப்பும் தவெகவினர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவிருப்பதாக சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னை மேயர் பிரியா தெரிவித்திருப்பதாவது, "ஒரு காணொலியில் ஏஐ மூலம் என்னை வக்கிரமாகச் சித்திரித்து தவெகவினர் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக் குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் 'தானே' பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதல்வர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை.

அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன.

Advertisement

Advertisement

இந்த தனிநபர் மீதான தாக்குதலைச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Legal action against TVK Vulgar Warriors for circulating AI-generated, misrepresented content online, says Chennai Mayor Priya

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.