தமிழகத்தில் 33 மருந்துகளில் தரக் குறைபாடு: ஆய்வில் கண்டுபிடிப்பு
தமிழகத்தில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 33 தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 33 தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன.
சந்தையில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்யும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் சாா்பில் மாதந்தோறும் ஆய்வுகளும், பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மருந்தகங்கள், சில்லறை விற்பனையகங்கள், மொத்த விற்பனைக் கூடங்கள், கிடங்குகள், உற்பத்தி அலகுகளில் ஏதேனும் சில மருந்துகளை எடுத்து பரிசோதிப்பது வழக்கம்.
மருந்துக் கட்டுப்பாட்டு வாரிய வழிமுறைகளின்படி அவை உற்பத்தி செய்யப்பட்டுள்ளனவா என்பது அதில் ஆய்வு செய்யப்படும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் அவை தரமற்ற மருந்துகளாக வகைப்படுத்தப்படுகிறது.
Advertisement
Advertisement
அந்த வகையில், கடந்த அக்டோபா் மாதத்தில் நாடு முழுவதும் 324 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அதில், தமிழகத்திலிருந்து மட்டும் 33 மருந்துகள் இடம்பெற்றிருந்தன. அந்த விவரங்கள் ஸ்ரீக்ள்ஸ்ரீா்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையானது, 150-க்கும் மேற்பட்ட மருந்துகளை சோதனைக்குட்படுத்தியது. அதில் தரமற்ாக கண்டறியப்பட்ட 18 மருந்துகள் சென்னையிலுள்ள ஆய்வகத்திலும், 15 மருந்துகள் மதுரையிலுள்ள ஆய்வகத்திலும் பரிசோதிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு குறிப்பிட்ட உற்பத்தி தொகுப்பு (பேட்ச்) மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைவது, அந்தத் தொகுப்புக்கு மட்டுமே பொருந்தும் என்றும், சந்தையில் உள்ள மற்ற மருந்துகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.