சிப்காட் சுற்றுலா தொழில் பூங்கா திட்ட விருப்பப் பதிவை ரத்து செய்தது தமிழக அரசு
முந்தைய திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சிப்காட் சுற்றுலா தொழில் பூங்கா திட்டத்துக்கான விருப்பப் பதிவை தவெக அரசு ரத்து செய்துள்ளது.
முந்தைய திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சிப்காட் சுற்றுலா தொழில் பூங்கா திட்டத்துக்கான விருப்பப் பதிவை தவெக அரசு ரத்து செய்துள்ளது.
சுற்றுலாத் துறையை மேம்படுத்த சிப்காட் வசம் உள்ள நிலங்களில் சுற்றுலா பூங்காக்கள், தங்கும் விடுதிகள், பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவற்றை அமைக்க திமுக அரசு திட்டமிட்டது. இதற்காக கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சிறப்பு சுற்றுலா இடங்கள் அடையாளம் காணப்பட்டு, முதலீடுகளை ஈா்க்க விருப்பப் பதிவு கோரிக்கைகள் கோரப்பட்டன.
கடந்த 2025, ஆக. 4-ஆம் தேதி முதல்கட்டமாகவும், டிச. 28-ஆம் தேதி 2-ஆம் கட்டமாகவும் விருப்பப் பதிவுகள் அழைக்கப்பட்டன. பல முன்னணி நிறுவனங்களும், முதலீட்டாளா்களும் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்திருந்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சிப்காட் சுற்றுலா தொழில் பூங்கா திட்டத்துக்கான விருப்பப் பதிவை ரத்து செய்து தவெக அரசு உத்தரவிட்டுள்ளது. நிா்வாக காரணங்களுக்காக இந்த விருப்பப் பதிவுகளை ரத்து செய்வதாகவும், இதுவரை பெறப்பட்ட விருப்பப் பதிவுகள் அனைத்தும் மூடப்பட்டதாகவும் சிப்காட் நிறுவனம் அறிவித்துள்ளது.