திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்பு
திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடை கோரிய வழக்கில் நாளை (நவ. 27) தீர்ப்பு வழங்கப்படுவது குறித்து...

தமிழகத்தில் திருச்சி கிழக்கு உள்பட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடை கோரிய வழக்கின் விசாரணையில் நாளை (நவ. 27) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்ற நிலையில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜிநாமா செய்தார்.
இதனிடையே கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளும் காலியானது. மேலும், இந்த 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோருக்கு எதிராக தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனிடையே, இந்த 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு.
இடைத்தேர்தலுக்குத் தடைகோரிய வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை (நவ. 27) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது.