தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாளை விசிக போராட்டம்! திருமாவளவன்
தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாளை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாளை (நவ.28)-ம் தேதி அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தத் அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் சேலம், செல்வதற்காகக் கோவை விமான நிலையம் வருகை தந்தார், விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் கூறியதாவது..
Advertisement
Advertisement
நவம்பர் 27 மாவீரர் நாள், ஈழ விடுதலைக்காகப் பலியான அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு தருமபுரியில் நடைபெறுகின்றது. அதில் பங்கேற்பதற்காகக் கோவை வந்துள்ளேன். இங்கிருந்து சாலை மார்க்கமாக அங்குச் செல்ல உள்ளதாகக் கூறினார்.
நாளை 28-ம் தேதி அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. தொகுதி மறுவரையறை கூடாதென்ற காரணத்தை முன்வைத்தும், 543 தொகுதிகளிலும் மீண்டும் 25 ஆண்டுகளுக்கு நிலையாகத் தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
செங்கல்பட்டு தொகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கின்றேன் என்று கூறியவர், நாடாளுமன்ற கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்ற பா.ஜ.க. முயல்கின்றது இதனை ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்றுக் கொள்ளாது என்றார்.