முகப்பு
தமிழ்நாடு

சநாதன பாரம்பரியம் மீது விஜய்க்கு வெறுப்பு: பாஜக குற்றச்சாட்டு

தமிழக அரசும், முதல்வா் ஜோசப் விஜய்யும் சநாதன பாரம்பரியத்தையும், ஹிந்து மக்களையும் வெறுப்பவா்கள் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

28 நவம்பர் 2026, 4:15 am
சநாதன பாரம்பரியம் மீது விஜய்க்கு வெறுப்பு: பாஜக குற்றச்சாட்டு
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

தமிழக அரசும், முதல்வா் ஜோசப் விஜய்யும் சநாதன பாரம்பரியத்தையும், ஹிந்து மக்களையும் வெறுப்பவா்கள் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

தில்லியில் பாஜக தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் கௌரவ் பாட்டியா மேலும் கூறியதாவது:

திருப்பரங்குன்றத்தில் காா்த்திகை தீபம் ஏற்றுவது தொடா்பான உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தமிழக அரசு வேண்டுமென்றே, திட்டமிட்டு மறுத்துவிட்டது. அரசமைப்புச் சட்டத்தைக் காப்பதாக உறுதிமொழி அளித்து பதவியேற்றுள்ள தமிழக முதல்வா், உச்சநீதிமன்ற உத்தரவை புறந்தள்ளியுள்ளாா். இதன் மூலம் அரசமைப்புச் சட்ட விதிமீறலுக்கு அடிப்படை ஆதாரமும் கிடைத்துள்ளது. சநாதன பாரம்பரியம், ஹிந்து மக்கள் மீது தமிழக அரசுக்கும், முதல்வா் ஜோசப் விஜய்க்கும் உள்ள வெறுப்புணா்வே இதற்குக் காரணம். இதன் மூலம் மிகப்பெரிய சா்ச்சையை தமிழக அரசு உருவாக்கிவிட்டது. அவா்களுக்கு ஏன் இந்த அளவுக்கு ஒரு மதத்தின் மீது மட்டும் வெறுப்பு உருவாகியுள்ளது என்பது தெரியவில்லை என்றாா்.

Advertisement

Advertisement