முகப்பு

திருப்பரங்குன்றம் தூண் பகுதியில் எவ்வாறு ஏற்றப்படவிருக்கிறது தீபம்?

திருப்பரங்குன்றம் தூண் பகுதியில் எவ்வாறு ஏற்றப்படவிருக்கிறது தீபம் என்பது பற்றி...

திருப்பரங்குன்றம் தூண் பகுதியில் எவ்வாறு ஏற்றப்படவிருக்கிறது தீபம்?
தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடு
பகிர்:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூண் பகுதியில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன. ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்ளிட்ட வழிகாட்டுதல் குழுவினர் மலைக்குப் புறப்பட்டு சென்றுள்ளனர்.

மலை மீதிருந்து வெளியாகும் காட்சிகள், மலையில் உள்ள தூணில் ஒரு பெரிய விளக்கு வைக்கப்பட்டு அதனையும் சேர்த்து எண்ணெயில் நனைந்த திரி முழுக்க தூணை மறைத்தபடி சுற்றி வைக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கில் நெய் ஊற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது தூணில் மேலும் ஒரு அகல் விளக்கை வைத்து, தூணைச் சுற்றியிருக்கும் திரிகள், அகல் விளக்குக்குள் வைத்து சூடங்கள் கொண்டு தீபம் ஏற்றப்படலாம் என்று தெரிகிறது.

இப்போது தூண் முழுக்க நெய்யில் நனைந்த திரி இருக்கும் நிலையில், எங்கு தீபம் ஏற்றப்படும், தூண் மேல் பக்கத்தில் தீபம் ஏற்றப்படுமா? தூணைச் சுற்றிலும் இருக்கும் திரி பகுதி எரியத் தொடங்கினால், அருகில் உள்ள கம்புகளால் கட்டப்பட்ட மேடையும் எரிந்து விடும் ஆபத்து இருக்கிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Advertisement

Advertisement

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் மகா தீபம் ஏற்றுவதற்காக, தலா 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மண்சட்டிகள் மலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

​திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

​இதன் ஒரு பகுதியாக, தீபம் ஏற்றுவதற்காகத் தலா 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 புதிய மண் சட்டி போன்றவை கொண்டு செல்லப்பட்டன முன்னதாக, கோயில் அலுவலகத்தில் இந்த மண்சட்டிகள் மற்றும் தீபம் ஏற்றத் தேவையான கற்பூரம் உள்ளிட்ட பூஜைப் பொருள்களை வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

​தொடர்ந்து, சிறப்பு பூஜை செய்யப்பட்ட மண்சட்டிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டன.

​மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் பாதுகாப்பாகத் தீபம் ஏற்றுவதற்கு ஏதுவாக, அங்கு சாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மேல் பச்சைக் களிமண் பூசப்பட்டு, அதன் மீது இந்த மண்சட்டிகளை நிலைநிறுத்தி, நெய் ஊற்றி மகா தீபம் ஏற்றப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

summary

How is the *deepam* (lamp) going to be hoisted onto the pillar section at Tirupparankundram?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.