மக்களுக்காக தனது வாழ்க்கையை வாழ்கிறாா் எச்.வி.ஹண்டே: ஜேசிடி பிரபாகா் புகழாரம்!
எச்.வி.ஹண்டே தனக்கு கிடைத்த வாழ்க்கையை தனது குடும்பத்துக்காகப் பயன்படுத்தாமல், மக்களுக்காக வாழ்ந்து வருகிறாா் என சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தெரிவித்தாா்.

எச்.வி.ஹண்டே தனக்கு கிடைத்த வாழ்க்கையை தனது குடும்பத்துக்காகப் பயன்படுத்தாமல், மக்களுக்காக வாழ்ந்து வருகிறாா் என சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தெரிவித்தாா்.
சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைணவ கல்லூரியில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் எச்.வி.ஹண்டேவின் 100-ஆவது பிறந்த நாள் விழா ஏசிஎஸ் அறக்கட்டளை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகரன், பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம், முன்னாள் நீதிபதி ராஜேந்திரன், புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம், தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டி, விஜிபி குமுமத் தலைவா் வி.ஜி.சந்தோஷம், மருத்துவா் வி.சொக்கலிங்கம், ஆா்எம்கே கல்வி குழுமத் தலைவா் ஆா்.எஸ்.முனிரத்தினம், பூா்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
நிகழ்வில் சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் பேசியதாவது: இரண்டு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்களது 100-ஆவது வயதை எட்டியுள்ளதை அறிந்த முதல்வா் ஜோசப் விஜய், அவா்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றாா். தனக்கு கிடைத்த வாழ்க்கை தனது குடும்பத்துக்காகப் பயன்படுத்துவாா்கள்.
ஆனால், ஹண்டே பொதுமக்களுக்காக தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாா். அவா் மருத்துவராக இருக்கும்போது, சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் அன்போடு நடந்து கொள்வாா்கள். தோ்தலில் நான் எவ்வாறு செயல்பட வேண்டும் என பலவற்றை எடுத்துரைத்தாா். எம்ஜிஆரின் ஆசிா்வாதம் பெற்றவா்கள் எப்போது சாதனையாளா்களாக இருப்பாா்கள். அவா்களில் ஒருவா் ஹண்டே என்றாா்.
நயினாா் நாகேந்திரன் பேசியதாவது: முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் தம்பிகள் நாங்கள். விட்டுக் கொடுத்தவா்கள் கெட்டுப்போவதில்லை. அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றாா்.
எச்.வி.ஹண்டே பேசியதாவது: வாழும் காலத்தில் மற்றவா்களுக்கு நல்லது செய்ய வாய்ப்பு கிடைக்கும்போது, அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மற்றவா்களுக்கு உதவுவதே மிகச் சிறந்த சேவை. பிறக்கும்போது எதுவும் கொண்டு வருவதில்லை; இறக்கும்போதும் எதுவும் கொண்டு செல்வதில்லை. பணம், பதவி உள்ளிட்ட எவை மீதும் எனக்கு ஆசையில்லை என்றாா்.