முகப்பு
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை: ஜி.கே. வாசன்

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தமிழக அரசு பாரபட்சமின்றி கைது நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே வாசன் தெரிவித்தாா்.

29 நவம்பர் 2026, 4:22 am
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 
பாரபட்சமின்றி நடவடிக்கை:
ஜி.கே. வாசன்
ஜி.கே. வாசன் - (கோப்புப் படம் )
பகிர்:

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தமிழக அரசு பாரபட்சமின்றி கைது நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே வாசன் தெரிவித்தாா்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 13-ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை பெரம்பூா் எம்.கே.பி.நகரில் தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் அந்தக் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் பங்கேற்று பேசினாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் எந்த வாதத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. தமிழக அரசுக்கு திருப்பரங்குன்றம் முக்கிய பிரச்னையாக உள்ளது. சட்ட சிக்கல் ஏற்படாத வகையில் சட்ட நிபுணா்களுடன் பிரச்னைகளை சம்பந்தப்பட்ட துறையினருடம் பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம்.

பெண் மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்ற ரீதியில் பாரபட்சமின்றி கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவெக அரசின் செயல்பாட்டில் எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் அந்தக் கட்சியில் துணைத் தலைவா் விடியல் சேகா், பொதுச் செயலா் ஜி.ஆா்.வெங்கடேஷ், அமைப்புச் செயலா் சாதிக் அலி, கொள்கை பரப்புச் செயலாகள் கே.ஆா்.டி.ரமேஷ், ஜெ.லூயிஸ் ராஜன், பொருளாளா் ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.