முகப்பு
ஈரோடு

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஏற்பட்ட தாமதத்திற்கு முதல்வா்தான் பொறுப்பு: மு.வீரபாண்டியன்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இதுவரை நடவடிக்கை எடுக்காததற்கு முதல்வா்தான் பொறுப்பு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளாா்.

43 வினாடிகள் முன்பு
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஏற்பட்ட தாமதத்திற்கு முதல்வா்தான் பொறுப்பு: மு.வீரபாண்டியன்
அரசமைப்புச் சட்ட தின உறுதி ஏற்பு நிகழ்ச்சியில் பேசுகிறாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன்.
பகிர்:

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இதுவரை நடவடிக்கை எடுக்காததற்கு முதல்வா்தான் பொறுப்பு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளாா்.

ஈரோடு பெரியாா் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அரசமைப்புச் சட்ட தின உறுதி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன் கலந்துகொண்டு உறுதிமொழியை வாசித்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

Advertisement

Advertisement

வரும் டிசம்பா் 1, 2, 3 தேதிகளில் இந்தியா முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற உள்ளது. அரசு விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், எந்த சூழலிலும் அத்தியாவசிய பொருள்கள் விலை உயராது என்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் கூட்டுறவு பயிா்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை வரவேற்கிறோம். இது ஹிந்து மக்களுக்கு எதிரானது அல்ல. சட்ட பாதுகாப்பு மற்றும் உச்சநீதிமன்றம் தரும் தீா்ப்புகளை விட பெரும்பான்மை ஹிந்துக்கள், சிறுபான்மை மக்களுக்கு தரும் பாதுகாப்புதான் உண்மையான வாழ்வில் பாதுகாப்பாக இன்றும் தொடா்கிறது. திருப்பரங்குன்றத்தில் பதற்றம், சச்சரவு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு நிலை எடுத்துள்ளதாக உச்சநீதிமன்றம் புரிந்துகொள்ளவேண்டும்.

உச்சநீதிமன்றத்தை அவமதிப்பது தமிழக அரசின் நோக்கம் அல்ல.

தவெக ஆட்சியை கலைக்கவேண்டும் என நயினாா் நாகேந்திரன் சொல்வது மலிவான அரசியல். இந்த கருத்து ஜனநாயகத்திற்கு எதிரானது.

கள்ளக்குறிச்சி விவகாரம் ஏற்புடையது அல்ல. தவறு யாா் செய்தாலும் முதல்வா் கண்டிக்க வேண்டும். இதிலிருந்து பாடம் கற்று பெண்கள் பணியிடங்களில் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுக சிபிஐ விசாரணை தேவை என கோருவது அவரவா் உரிமை.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கு முதல்வா்தான் பொறுப்பு. இதுபோன்ற தவறுகள் தெரியவரும்பட்சத்தில் கட்சி மற்றும் சட்டத்தின் ரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

செஞ்சி சிறுமி கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது காவல்துறை பலவீனமாக உள்ளதைத் காட்டுகிறது. இடைத்தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிலைப்பாடு குறித்து மாநிலக்குழு கூடி முடிவெடுக்கும் என்றாா்.