முகப்பு

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

43 வினாடிகள் முன்பு
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!
திருப்பரங்குன்றம் தூண் - from video grab
பகிர்:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூண் பகுதியில், இன்று மாலை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

மலை மேல் களிமண், கோணிச் சாக்கு, சூடம் உள்ளிட்ட பூஜை பொருள்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், இன்று மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கான பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

Advertisement

Advertisement

கார்த்திகை தீபத்தன்ற, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் கடந்த நவ.20 தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இதனை மதுரை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றாமல், வழக்கமாக ஏற்படும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் மட்டும் தீபம் ஏற்றியது.

இதனால் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு நேற்று விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரை கடுமையாக கண்டித்திருந்தனர்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் அரங்காவல் குழுவை கலைத்து, ஓய்வுபெற்ற இரு நீதிபதிகள் கண்காணிப்பில் இன்று திருப்பரங்குன்றம் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும்.

மத்திய பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டின் கீழ் திருப்பரங்குன்றம் மலை முழுவதும் கொண்டுவர உத்தரவிட்டது.

மேலும் பக்தர்கள் அனைவரும் மலைக்குச் சென்று தீபம் ஏற்றலாம், தர்காவுக்கும், திருப்பரங்குன்றத்துக்கும் உரிய பாதுகாப்பு வழங்க சி.ஆர்.பி.எஃப்.க்கு உத்தரவு வழங்கியிருக்கிறது.

இந்த நிலையில் மலை உச்சியில் இருக்கக்கூடிய தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான மரப்பலகை கொண்டு சாரம் கட்டும் பணிகளை பணியாளர்கள் துவங்கி இருக்கின்றனர்.

திருப்பரங்குன்றத்தைச் சுற்றி 130-க்கும் அதிகமான சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இன்று மாலை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்பட்ட உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் திருப்பரங்குன்றம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

summary

Preparations are in full swing to light a lamp atop the Tiruparankundram hill!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.