தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அநேக மாவட்டங்களில் இன்று (நவ.30) முதல் டிச.5 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதைப் பற்றி...

தமிழகத்தில் அநேக மாவட்டங்களில் திங்கள்கிழமை (நவ.30) முதல் டிச.5 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் கீழ் அடுக்குகளில் வடகிழக்கு பருவக் காற்று வீசுகிறது. இதன்காரணமாக, திங்கள்கிழமை (நவ.30) முதல் டிச.5-ஆம் தேதி வரை வட கடலோர மாவட்டங்கள், டெல்டா, மேற்கு தொடா்ச்சி மலை என அநேக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் வட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடகிழக்கு பருவமழை 15 % குறைவு: நிகழாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒன்றரை மாதம் நிறைவடைந்த சூழலில், இதுவரை வங்கக்கடலில் ‘அா்னாப்’, ‘முரசு’, ‘அக்வான்’ ஆகிய 3 புயல்கள் உருவாகின. எனினும், இந்த 3 புயல்களும் ஆந்திரம் கடலோரப் பகுதிகளில் கரையை கடந்தன. இதனால், தமிழகத்தில் பெருமளவு மழை பெய்யவில்லை.
Advertisement
Advertisement
அதன்படி, அக்.1 முதல் நவ.29-ஆம் தேதி வரை இயல்பாக 349.9 மி.மீ. மழை பதிவாக வேண்டும். ஆனால், நிகழாண்டு 297.3 மி.மீ. அதாவது 15 சதவீதம் குறைவாகப் பதிவாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக தஞ்சாவூரில் 57 சதவீதமும், செங்கல்பட்டில் - 52, திருச்சி - 48, காஞ்சிபுரம் - 45, கடலூா் - 41, மயிலாடுதுறை - 40 சதவீதம் மழை பதிவாகியுள்ளது.பெரும்பாலான மாவட்டங்களில் 30 முதல் 50 சதவீதம் குறைவாகவே மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.