தொகுதி மறுவரையறை பிரச்னையில் திமுக எடுத்தது சாதுரியமான முடிவு: பண்ருட்டி ராமச்சந்திரன்
தொகுதி மறுவரையறை பிரச்னையில் திமுக எடுத்துள்ள இந்த முடிவு சாதுரியமான முடிவு என பண்ருட்டி ராமச்சந்திரன் பாராட்டியிருப்பது குறித்து...

சேலம்: தொகுதி மறுவரையறை பிரச்னையில் திமுக எடுத்துள்ள இந்த முடிவு சாதுரியமான முடிவு எனப் பாராட்டியுள்ள மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன், விஜய்யின் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிட்டது என தெரிவித்தார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு நாளை(நவ.30) தொடங்க உள்ள சிறப்புக் கூட்டத்தொடரில் கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை திருத்தச் சட்ட மசோதாவுக்கு திமுக ஆதரவளிக்க முடிவு செய்துள்ள நிலையில், தமிழக அரசியலில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன் பாராட்டியுள்ளார்.
சேலம், அரியலூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த திருமண விழாவில் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
Advertisement
Advertisement
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன். இன்றைய அரசியல் சூழ்நிலை குறித்து கருத்து தெரிவிக்க விரும்புகிறேன்.
தற்போதைய அரசியலில் பல பிரச்னைகள் உள்ளது. அவரவர் போக்கில் செல்கின்றனர்
நான் அரசியலுக்கு வந்து 80 ஆண்டுகள் ஆகிறது. தற்போதைய அரசியல் நிலைகளை பார்த்தால் பயமாக இருக்கிறது.
டிரம்பின் அரசியலில் சம வாய்ப்பு தர வேண்டும் என்று மற்ற மக்களை வெளியேற்றினார். ஆனால், தற்போது அங்கு நிலமை வேறாக உள்ளது. சம வாய்ப்பு என்பது முக்கியம். படிப்பில் ஆகட்டும், வேலை வாய்ப்புகள் ஆகட்டும். அனைத்திலும் சம வாய்ப்பு இருக்க வேண்டும்.
இலங்கையில் சம வாய்ப்பு இல்லாததால் தான் போராடினார்கள். ஆனால், அதே இலங்கை சீரழிந்து விட்டது. திவால் ஆகிவிட்டது.
இதனால்தான் சம வாய்ப்பு தர வேண்டும். இலங்கையில் என்ன நடந்ததோ அது தற்போது இங்கும் நடந்து வருகிறது.
ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மொழி என பேசி வருகிறார்கள். 20 கோடி முஸ்லிம்கள் எங்கு செல்வார்கள். நாட்டு மக்களின் எதிர்கால நம்பிக்கையை நிர்ணயிக்க வேண்டும்.
சரித்திரம் திரும்பி வருகிறதா?
1965 இல் திருப்புமுனை ஏற்பட்டது. இப்போது அதுபோல சரித்திரம் திரும்பி வருகிறதா என எண்ணுகிறேன் என்றார்.
சாதுரியமான முடிவு
மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக தற்போது எடுத்துள்ள நிலைபாடு குறித்து கேட்டதற்கு, சாதுரியமான முடிவு எடுத்திருக்கிறார்கள்.
1980 இல் கலைஞர் என்ன செய்தாரோ, இப்போது ஸ்டாலினும் அதை செய்திருக்கிறார். இது நல்ல முடிவு தான் என பாராட்டினார்.
முதல்வர் விஜய் குறித்த கேள்விக்கு, விஜய் நல்லது செய்வார் என நினைத்தும், இரண்டு கட்சியை பார்த்து விட்டோம். விஜய்க்கு ஓட்டு போடலாம் என கருதி தான் ஓட்டு மக்கள் ஓட்டு போட்டார்கள். மக்கள்தான் எஜமானர்கள். தற்போது விஜய் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு ஒன்றும் தெரியாது என நினைக்க வேண்டாம் என அவர் கூறினார்.