முகப்பு

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளித்தது துரதிஷ்டவசமானது: துரை ரவிக்குமார் பேட்டி

தொகுதி மறுவரையறை குறித்த திமுகவின் 2 கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாக புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளதால் மசோதாவுக்கு திமுக....

9 வினாடிகள் முன்பு
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளித்தது துரதிஷ்டவசமானது: துரை ரவிக்குமார் பேட்டி
ரவிக்குமார் - கோப்புப்படம்
பகிர்:

விழுப்புரம்: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளித்திருப்பது துரதிஷ்டவசமானது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் துரை ரவிக்குமார் எம்.பி தெரிவித்தார்.

விழுப்புரம் நகராட்சித் திடலில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நவ.30 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. மசோதா நிறைவேற்றப்பட்டால் தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படும்.

இந்த சூழலில் சென்னையில் நடைபெற்ற திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் மசோதாவுக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

துரதிஷ்டவசமானது

திமுகவின் இந்த முடிவு துரதிஷ்டவசமானது. இதுவரை மாநில உரிமைகள் குறித்து பேசி வந்த திமுக இந்த முடிவை எடுத்திருக்கிறது. மாநிலங்கள் உரிமைகள் தொடர்பான குரியன் குழு அளித்த முதல் கட்டப் பரிந்துரைகளை பற்றி திமுக பேசாதது ஏன்? என்று துரை ரவிக்குமார் கேள்வி எழுப்பினார்.

தொகுதி மறுவரையறை குறித்த திமுகவின் இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாக புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளதால் மசோதாவுக்கு திமுக ஆதரவளிப்பதாக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

It is unfortunate that the DMK supported the constituency delimitation bill: Interview with VCK Durai Ravikumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.