முகப்பு

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவு!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கவிருப்பதைப் பற்றி...

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவு!
ஜெகன் மோகன் ரெட்டி - பிரதமர் மோடி.
பகிர்:

மத்திய பாஜக அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்று கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பரபரப்பான அரசியல் சூழலில், வருகிற நவ. 30-ஆம் தேதிமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் முறைப்படி முடித்துவைக்கப்படாத நிலையில், சிறப்பு அமர்வு குறித்த அறிவிப்பை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று (நவ. 30) வெளியிட்டார்.

வருகிற 2029 மக்களவைத் தேர்தலில் இருந்து 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை (மக்களவை-பேரவைகள்) அமலாக்குவதுடன், இந்த இடஒதுக்கீட்டுக்கு ஏற்ப மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசிலமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா, கடந்த ஏப்ரல் நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் கொண்டுவரப்பட்டது.

Advertisement

Advertisement

மக்களவையில் இந்த மசோதா நிறைவேற மொத்த உறுப்பினர்களின் (543) எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளும், வாக்கெடுப்பில் பங்கேற்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை வாக்குகளும் தேவை. ஆனால், மூன்றில் இருபங்கு வாக்குகள் கிடைக்காததால் இந்த மசோதா தோல்வியடைந்தது.

மத்திய பாஜக அரசுக்கு அரசமைப்புச் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற தற்போதைய மக்களவை பலத்தின் அடிப்படையில் (3 காலியிடங்கள் தவிர்த்து 540) மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கு 361 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 320 எம்.பி.க்கள் உள்ளனர்.

கூடுதல் வாக்குகள் தேவைப்படும் நிலையில், 22 எம்.பி.க்களைக் கொண்ட திமுக, 8 எம்.பி.க்களைக் கொண்ட தேசியவாத காங்கிரஸ் (பவார்) ஆகிய கட்சிகளின் பங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதேநேரம் ஆந்திரத்தின் முந்தைய ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியிடம் 4 எம்.பி.க்கள் உள்ளனர்.

இந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொகுதி மறுவரையறை சமமான பங்கை உறுதிசெய்தால் ஆதரவு தெரிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைத் தவிர, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இந்த மசோதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோதும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்திருந்தது. தற்போதும் பிராந்திய சமநிலையை உறுதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆதரவு தெரிவித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் (பவார்), ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில், 22 எம்.பிக்களைக் கொண்டுள்ள திமுகவும் ஆதரவு தெரிவிக்குமா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

summary

The Jagan Mohan Reddy-led YSRCP will support the NDA government's push for the Delimitation Bill in Parliament, provided it ensures regional balance, party sources told news agency ANI on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.