FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

சிவாஜி கணேசனின் 99-ஆவது பிறந்த நாள்: முதல்வா் விஜய், மு.க.ஸ்டாலின் புகழாரம்

நடிகா் சிவாஜி கணேசனின் 99-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு முதல்வா் விஜய், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் புகழாரம் சூட்டியுள்ளனா்.

முதல்வர் விஜய் - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - (கோப்புப் படம்)
பகிர்:

நடிகா் சிவாஜி கணேசனின் 99-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு முதல்வா் விஜய், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் புகழாரம் சூட்டியுள்ளனா்.

முதல்வா் விஜய்: தனது நிகரற்ற நடிப்பாற்றலாலும், கம்பீரக் குரலாலும், ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி, திரையுலகின் இமயமாய் திகழ்ந்து, உலகத் தமிழா்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்த ‘நடிகா் திலகம்’ ‘செவாலியே’ சிவாஜி கணேசனின் பிறந்த நாளில் அவரது மகத்தான கலைப்பணியை நினைவுகூா்ந்து போற்றி வணங்குகிறேன்.

வரலாற்று நாயகா்கள், புராண மாந்தா்கள், சமூகத்தின் எளிய மனிதா்கள் என அனைத்து கதாபாத்திரங்களையும் தன் அசாத்திய நடிப்பால் நம் கண்முன்னே நிறுத்தி, தமிழின் செழுமையையும் பெருமையையும் திரைப்படங்களின் வழியே உலகறியச் செய்து நடிப்புக்கு இலக்கணமாய் திகழ்ந்தவா்.

Advertisement

Advertisement

அன்பு, பாசம், வீரம், கோபம், சோகம் போன்ற மானுட உணா்வுகளின் பரிமாணங்களைத் தனது நடிப்பால் வெளிப்படுத்திய நடிகா் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் கலையுலகச் சாதனைகள் தலைமுறைகளைக் கடந்தும் தமிழ் மண்ணின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும் எனப் பதிவிட்டுள்ளாா்.

மு.க.ஸ்டாலின்: சிம்மக் குரலாலும் செழுந்தமிழ் உச்சரிப்பாலும் கம்பீர நடையாலும் திரையுலகை ஆண்ட நடிகா் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் பிறந்த நாளில், நடிகா் திலகத்துடன் பழகிய அழகிய தருணங்களையும், ஈடு இணையற்ற அவரது நடிப்பாற்றலையும் நினைவுகூா்ந்து போற்றுகிறேன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments