FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்: முதல்வர் ஜோசப் விஜய் புகழஞ்சலி

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் பிறந்த நாளையொட்டி, முதல்வர் விஜய் புகழஞ்சலி குறித்து...

முதல்வர் ஜோசப் விஜய் புகழஞ்சலி - கோப்புப்படம்
பகிர்:

திரையுலகின் இமயமாய் திகழ்ந்து, உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் என முதல்வர் ஜோசப் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் பிறந்த நாளையொட்டி, முதல்வர் ச.ஜோசப் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதில், தனது நிகரற்ற நடிப்பாற்றலாலும், கம்பீரக் குரலாலும், ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி, திரையுலகின் இமயமாய் திகழ்ந்து, உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாளில் அவரது மகத்தான கலைப்பணியை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.

Advertisement

Advertisement

வரலாற்று நாயகர்கள், புராண மாந்தர்கள், சமூகத்தின் எளிய மனிதர்கள் என அனைத்து கதாபாத்திரங்களையும் தன் அசாத்திய நடிப்பால் நம் கண்முன்னே நிறுத்தி, தமிழின் செழுமையையும் பெருமையையும் திரைப்படங்களின் வழியே உலகறியச் செய்து நடிப்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்தவர்.

அன்பு, பாசம், வீரம், கோபம், சோகம் போன்ற மானுட உணர்வுகளின் பரிமாணங்களைத் தனது நடிப்பால் வெளிப்படுத்திய

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் கலையுலகச் சாதனைகள் தலைமுறைகளைக் கடந்தும் தமிழ் மண்ணின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும்! என குறிப்பிட்டுள்ளார்.

Nadigar Thilagam Sivaji Ganesan Birthday: CM Joseph Vijay Pays Tributes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments