சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா! தம்பி விஜய் அரசு மீது நம்பிக்கை - பிரபு
சிவாஜி கணேசனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை தமிழக அரசு சிறப்பாக கொண்டாடும் என்ற நம்பிக்கை உள்ளதாக பிரபு பேசியது குறித்து...
சிவாஜி கணேசனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை தமிழக அரசு சிறப்பாக கொண்டாடும் என்ற நம்பிக்கை உள்ளதாக நடிகர் பிரபு இன்று (அக். 1) தெரிவித்தார்.
சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி சென்னை அடையாறு மணிமண்டபத்தில் உள்ள அவரின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியதை செலுத்தப்பட்டது.
தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் ராஜ்மோகன், வெங்கடரமணன் ஆகியோர் சிவாஜி கணேசன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Advertisement
Advertisement
இதுமட்டுமின்றி, இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான வன்னி அரசு, நடிகர் பிரபு, நடிகர் நாசர், விக்ரம் பிரபு மற்றும் சிவாஜி கணேசன் குடும்பத்தினர் எனப் பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் செய்தியார்களுடன் நடிகர் பிரபு பேசியதாவது:
''நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் அப்பாவின் (சிவாஜி கணேசன்) ரசிகர் மற்றத்தைச் சேர்ந்தவர்கள் இன்று இங்கு வந்துவிடுகிறார்கள். அவர்களின் அன்புக்கு நன்றி. இங்கு வந்து தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்திய அமைச்சர்கள், ரசிகர் மன்றத்தினருக்கு நன்றி. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
99 ஆவது பிறந்தநாளில் இருந்தே நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிடுவோம் என முதல்வர் விஜய் உறுதி அளித்துள்ளார். இதனை தமிழக அரசு சிறப்பாக செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது'' எனக் குறிப்பிட்டார்.
Sivaji Ganesan's Centenary Celebrations! Faith in the Government Prabhu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.