FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அண்ணி, அண்ணி எனக் குரலெழுப்பிய ரசிகர்கள்! சிரித்துக் கொண்டே கையசைத்த சங்கீதா!

சிக்மா படம் பார்க்க வந்த சங்கீதா, ரசிகர்களை பார்த்து கையசைத்தார்...

சங்கீதா - x
பகிர்:

சிக்மா படம் பார்க்க திரையரங்கு வந்த சங்கீதாவை கண்டவுடன் ரசிகர்கள் அண்ணி, அண்ணி என குரலெழுப்பியவுடன், அவர்களை நோக்கி சிரித்தபடி கையசைத்தார்.

லைகா தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகும் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாகவும் ஃபரியா அப்துல்லா நாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படம் தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 9.30 மணியளவில் திரையரங்குகளில் வெளியானது.

Advertisement

Advertisement

தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் முதல் திரைப்படம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் ஒளிபரப்பான சிக்மா திரைப்படத்தின் முதல் காட்சியை ஜேசன் சஞ்சய்யின் தாய் சங்கீதாவும், சகோதரி திவ்யா விஜய்யும் பார்த்தனர்.

பால்கனியில் படத்தை காண வந்த சங்கீதாவை கண்டவுடன், விஜய்யின் ரசிகர்கள் அண்ணி, அண்ணி என குரலெழுப்பினர். அவர்களை பார்த்த சங்கீதா, சிரித்தபடி கையசைத்து வணக்கம் தெரிவித்தார்.

தொடர்ந்து, இயக்குநர் ஜேசன் சஞ்சய்யும் ரசிகர்களை நோக்கி கையசைத்து ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்தார்.

முதல்வர் விஜய் இன்று காலை மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தை தொடக்கி வைத்த நிலையில், சற்றுநேரத்தில் மதுராந்தகம் தேர்தல் பிரசாரத்துக்கு புறப்படவுள்ளார். அதனால், அவர் சிக்மா படத்தை எப்போது பார்ப்பார் என்ற தகவல் வெளியாகவில்லை.

summary

Fans shouted, "Anni! Anni!" Sangeetha waved back with a smile.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments