FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மக்களைச் சந்திக்க முதல்வர் மீண்டும் வரக்கூடாதா? அமைச்சர் என். ஆனந்த்

தோல்வி பயத்தினால் முதல்வர் இரண்டாவது முறையாக தாராபுரம் வருகிறாரா? என்ற கேள்விக்கு அமைச்சர் ஆனந்த் பதில்...

அமைச்சர் ஆனந்த் - DIN
பகிர்:

மக்களைச் சந்திக்க முதல்வர் வரக்கூடாதா? என அமைச்சர் என். ஆனந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான என். ஆனந்த், தாராபுரத்தில் நாளை நடைபெறும் முதல்வர் விஜய்யின் சாலை வலம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட வருகை தந்தார்.

முன்னதாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய வித்யா ராம்ராஜை சந்தித்த அவர், சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Advertisement

Advertisement

தொடர்ந்து செய்தியாளர்கள், தமிழக முதல்வர் விஜய் தோல்வி பயம் காரணமாக மீண்டும் மீண்டும் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு வருவதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஆனந்த், "வித்தியாசமான கேள்வி கேட்கிறீர்கள், ஏன், ஒரு முதல்வர் மீண்டும் மக்களை சந்திக்கக் கூடாதா? புதிது புதிதாக, கேள்வி எழுப்புகிறீர்கள்" என்று கூறிவிட்டு மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

மதுராந்தகத்திற்கு இருமுறை பிரசாரத்திற்குச் சென்ற முதல்வர் விஜய், நாளை தாராபுரத்திற்கு இரண்டாவது முறையாக செல்வது குறிப்பிடத்தக்கது.

summary

Shouldnt the CM vijay come again to meet the people: Minister N. Anand

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments