வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!
தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து சாலைவலம் மேற்கொண்ட முதலவர் விஜய் வஞ்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தது பற்றி....
தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து சாலைவலம் மேற்கொண்ட முதலவர் விஜய் வஞ்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது முதல்வர் விஜய்க்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இந்நிகவின்போது அமைச்சர்கள் என். ஆனந்த், செங்கோட்டையன், ரமேஷ் உள்ளிட்டார் உடன் இருந்தனர்.
வஞ்சியம்மன் கோயிலில் சாமிதரிசனம் செய்துவிட்டு சாலையில் நடந்துசென்று இருபுறமும் கூடியிருந்த மக்களிடையே வாக்கு சேகரித்தார்.
Advertisement
Advertisement
தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில், தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து தாராபுரம் தொகுதியில் முதல்வரும், தவெக தலைவருமான விஜய் சாலைவலம் சென்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார்.
தாராபுரம் தொகுதியில் சுமார் 2 மணிநேரம் அவர் சாலைவலம் மேற்கொண்டார்.
இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை கோவை வந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் சென்றார்.
Chief Minister Vijay, who campaigned in a roadshow in Dharapuram supporting TVK candidate Sathyabama, had darshan at the Vanchiyamman Temple.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.