தமிழ்நாட்டில் 8 மணிநேரமாக மின்தடை நீட்டிக்கப்படுகிறதா? மின்வாரியம் விளக்கம்!
தமிழ்நாட்டில் மின்தடை நேரம் குறித்து மின்வாரியம் கூறியது பற்றி...
தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறையச் சமாளிக்க, பராமரிப்புப் பணிகள் என்ற பெயரில் மின்தடையை 8 மணிநேரம் வரையில் அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.
இந்த நிலையில், மாநிலத்தில் மின்தடை அதிகரிக்கப்படுவதாகப் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானது என மின்வாரியம் மறுத்துள்ளது.
இதுகுறித்து மின்வாரியத்தின் அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாடு மின்வாரியம் பராமரிப்பு பணிகளுக்கான மின் நிறுத்தத்தை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே நிர்ணயித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்தக் கால அளவை கண்டிப்பாக பின்பற்றுமாறு அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களில் பராமரிப்பு பணியின்போது வேறு பழுதுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் அதை சரிசெய்ய சிறிதளவு கால அவகாசம் கூடுதலாக எடுக்கப்பட்டது.
மேலும் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யும்போது, முன்னதாகவே பாதிக்கப்படும் மின் நுகர்வோர்களுக்கு செய்தி குறிப்புகள், குறுஞ்செய்தி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் முன்னறிவிப்பு செய்த பின்பே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் பகல் நேரங்களில் மின் தேவையை விட மின் இருப்பு உபரியாகவே உள்ளது என்று கூறியுள்ளனர்.
Electricity Board clarifies power outage timings in Tamil Nadu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.