இது மன்னராட்சி அல்ல; மக்களாட்சி: மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் வெங்கடரமணன் பதில்
தவெகவை விமர்சித்த மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் வெங்கடரமணன் பதிலளித்தது குறித்து...
மக்களுக்கு நன்மை செய்வதற்காக தவெக ஆட்சி அமைக்கவில்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்த நிலையில், திமுகவினர்தான் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என அமைச்சர் வெங்கடரமணன் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் வெங்கடரமணனின் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "75 ஆண்டு கால கட்சியில் பல ஆண்டுகள் ஆட்சியில் அதிகாரத்தில் இருந்துவிட்டு ஒவ்வொரு தேர்தலிலும் பொய்யான வாக்குறுதிகளை தந்துவிட்டு, இன்றுவரை மக்களைப் பற்றி மாநிலத்தைப் பற்றி கவலைப்படாமல் குடும்பநலன் ஒன்றே குறிக்கோளாக செயல்பட்டவர்கள்தான் தீயசக்தியின் தலைமை குடும்பத்தினர்.
தீயசக்தியின் ஆட்சியின் அவலங்களை மக்கள் உணர்ந்ததால்தான் தமிழ்நாட்டின் தன்னிகரற்ற தலைவராக விஜய் உருவெடுத்துள்ளார்.
Advertisement
Advertisement
தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்று ஒவ்வொரு நாளும் உழைத்து வரும் தவெக தலைவர் விஜய். வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்தது நீங்கள்தான் என்பது மக்களுக்கே தெரிந்துவிட்டது என்பதால் அதை திசை திருப்ப நீங்கள் என்ன செய்தாலும் அது மக்களிடம் எடுபடாது. இத்தனை ஆண்டுகளாக மக்களுக்கு செய்த தூரோகத்தை தவறுகளை உணர்ந்து திருந்துங்கள்.
மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்க முடியாமல் இப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் மேடைக்கு மேடை பேசி ஒரு பயனுமில்லை. காரணம், இப்போது நடப்பது மன்னராட்சி அல்ல, சாமானியர்களின் மக்களாட்சி" என்று கூறியுள்ளார்.
Minister Venkataramanan responds to DMK Chief M.K. Stalin's criticism of TVK
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.